மேட்டூர் அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி காயம்
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகளைப் பார்க்க சென்ற விவசாயியை யானை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகளைப் பார்க்க சென்ற விவசாயியை யானை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்தார்.
மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் வனப் பகுதியிலிருந்து செட்டிப்பட்டி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பெண் யானைகள் நுழைந்தன.
இவற்றை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் அந்தக் கிராம மக்கள் ஈடுபட்டனர். மேலும், கிராமத்துக்குள் யானை புகுந்தது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற மேட்டூர் வனத் துறை, கொளத்தூர் காவல் துறையினரும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், யானைகளைப் பார்க்க சென்ற பொதுமக்கள் வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி யானைகளுக்கு மிக அருகே சென்று அவற்றைக் கல்லால் அடித்தனர். இதனால், ஆத்திரமடைந்த யானைகள் பொதுமக்களை விரட்டத் தொடங்கின.
Advertisement
Advertisement
அப்போது, கீழே விழுந்த விவசாயி ஈஸ்வரனை நெருங்கி வந்த ஒரு யானை, அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில், பலத்த காயமடைந்த அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, செட்டிப்பட்டியிலிருந்து விநாயகபுரம் நோக்கிச் சென்ற யானைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கிருந்து அருகேயுள்ள உள்ள காவிரி கரைக்குச் சென்றன. இந்த நிலையில், பாலாறு அல்லது தருமபுரி மாவட்டம், யாமனூர் வனப் பகுதிக்குக்குள் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.