கொடையாஞ்சியில் பூக்கிறது "பிரம்ம கமலம்'
வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.
வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.
இப்பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணியின் வீட்டில் இச்செடி உள்ளது. கடந்த சில நாள்களாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பூக்கள் மலர்ந்த நிலையில் உள்ளது. "உத்தரப்பிரதேச மாநிலத்திலும், இமயமலை அடிவாரத்திலும், பர்மா, சீனா நாடுகளில் உள்ள மலையடிவாரங்களிலும், சுமார் 4,500 மீட்டர் உயரமுள்ள மலைகளிலும் இப்பூக்கள் காணப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு மலராகவும் இப்பூ உள்ளது. பிரம்மாவின் தாமரை என அழைக்கப்படும் இப்பூ இரவு நேரத்தில் மட்டுமே மலரும்' என கோதண்டபாணி தெரிவித்தார்.