முகப்பு
தமிழ்நாடு

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் இலங்கை அகதி சிறுமி

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றபோது பிடிபட்ட இலங்கை அகதி தம்பதியின் 6 வயது சிறுமி ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார்.

Updated On : 12 ஜூலை, 2013 at 4:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றபோது பிடிபட்ட இலங்கை அகதி தம்பதியின் 6 வயது சிறுமி ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார்.

திருநெல்வேலி கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தம்பதி கர்ணன் (31), சந்திரிகா (29). இவர்களுக்கு சந்தோஷ்குமார் (10), ரஞ்சனி தேவி (7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

ரஞ்சனி தேவி முகாமுக்கு அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அக்குழந்தையிடம் பேச்சு கொடுத்தபோது, கொஞ்சும் தமிழில் அழகாகப் பேசினார். மேலும் பள்ளியில் ஆசிரியர் கற்றுக்கொடுத்த ஏதேனும் ஒரு பாடலை பாடச் சொன்னதும்.

Advertisement

நமது தேசம் இந்தியா என்று தொடங்கும் உறுதிமொழியை ஆங்கிலத்தில் அழகாகக் கூறி அசரவைத்தார். அவரது மழலை பேச்சால் சிறிது நேரத்தில் காவலர்கள் அனைவரையும் கவர்ந்தார். காவலர்கள் அனைவரும் அக்குழந்தையுடன் அன்பாக பேசி மகிழ்ந்தனர்.

அக்குழந்தையின் தந்தை கர்ணன் கூறியது: குழந்தைகளை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். ஆனால் எனக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் சேமித்து வைத்து படிக்க வைக்கிறேன். சிறிய வகுப்பு படிக்கும் போதே என்னால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் திணறுகிறேன். ஆனால் முகாமில் உள்ள இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்கு மட்டுமே செல்ல முடிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு போனால் நல்ல நிலைக்கு வந்துவிடலாம் என்றுதான் குடும்பத்துடன் புறப்பட்டு வந்தேன் என்றார் சோகத்துடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.