முகப்பு
தமிழ்நாடு

அடுத்தகட்டப் போராட்டம் குறித்து தூத்துக்குடியில் 24-ல் ஆலோசனை

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டம் குறித்து தூத்துக்குடியில் இம் மாதம் 24-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதென, இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On : 22 ஜூலை 2013, 3:26 am IST
பகிர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டம் குறித்து தூத்துக்குடியில் இம் மாதம் 24-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதென, இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து 700 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவுமுதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது. இதையடுத்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 14-ஆம் தேதி இடிந்தகரையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். 15-ஆம் தேதி கடற்கரைக் கிராமங்களில் கருப்புக் கொடியேற்றி போராட்டமும், இடிந்தகரையில் பெருந்திரள் மரணப் போராட்டமும் நடத்தினர்.

Advertisement

Advertisement

அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெறும் சமுதாயக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இடிந்தகரை செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இடிந்தகரைக்குச் சென்ற வாகனங்களை போலீஸôர் தடுத்து, திருப்பியனுப்பினர்.

எனினும், அதையும் மீறி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல், பெரியதாழை, திருநெல்வேலி மாவட்டம் உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட கடற்கரைக் கிராம மக்கள் இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை கூடினர். அங்கு மாலை 6 மணிக்கு சமுதாய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன், மை.பா. சேசுராஜ், முகிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அணுமின் நிலையத்துக்கு எதிரான அடுத்தகட்டப் போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசனைக் கூட்டத்தை தூத்துக்குடியில் இம் மாதம் 24-ஆம் தேதி நடத்துவது என்றும், அதில் முக்கிய முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.