முகப்பு
தமிழ்நாடு

காற்றின் வேகத்தால் திசைமாறி ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய இரு இலங்கை மீனவர்கள்

இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று காரணமாக திசைமாறி ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

Updated On : 22 ஜூலை 2013, 3:08 am IST
பகிர்:

இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று காரணமாக திசைமாறி ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை நீர்க்கொழும்பு பகுதி கஜினிகுடியைச் சேர்ந்த வருணகுல சூரி சேவியரின் மகன் வருணகுல சூரி செலஸ்டின் செனோமனி (32), காட்டுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வருணகுல சூரி செட்ரிக் மகன் வருணகுல சூரி ஜெயபால் புஷ்பகுமார் (39) ஆகிய இருவரும் மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியது. அதனால் அவர்கள் வந்த படகு ராமேசுவரம் அருகே பழுதாகி நின்றது. அப்போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களிடம் ராமேசுவரம் அருகே இருப்பதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இலங்கை மீனவர்கள் படகில் வேகமாகச் செல்ல முடியாததால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளனர். இவர்களிடம் உள்ளூர் போலீஸôரும், உளவுப் பிரிவு போலீஸôரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.