முகப்பு
தமிழ்நாடு

டியூஷன் ஆசிரியை அடித்ததில் 5 வயதுச் சிறுமிக்கு கண் பாதிப்பு

தூத்துக்குடியில் டியூஷன் ஆசிரியை அடித்ததில் 5 வயதுச் சிறுமிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2013, 3:24 am IST
பகிர்:

தூத்துக்குடியில் டியூஷன் ஆசிரியை அடித்ததில் 5 வயதுச் சிறுமிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது 5 வயது மகள் பேனசிர் பானு யூ.கே.ஜி. படித்து வருகிறார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையிடம் டியூஷனும் படித்து வருகிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை டியூஷனுக்கு சென்ற சிறுமியை ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் வலது கண்ணில் உள்காயம் ஏற்பட்டதாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமி கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், சிறுமியின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்துல்காதர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.