முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக நிர்வாகி படுகொலை: விஜயகாந்த் கண்டனம்

கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 3:21 am IST
பகிர்:

கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளிட்ட அறிக்கை:- எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் சின்னமுருகன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை திருநெல்வேலி 18-வது வார்டு கவுன்சிலர் தானேஸ்வரன் மோட்டார் சென்றபோது, அவரை வெட்டி கொலை செய்யும் முயற்சியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Advertisement

அரசியல் உள்நோக்கத்துடன்தான் அரசியல் எதிரிகளால் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. காவல்துறை என்பது ஆளங்கட்சியினருக்கு மட்டும் பாதுகாப்பு தருவதாக இருக்கக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.