பயங்கரவாதிகள் ஊடுருவத் திட்டம்: தமிழக கடலோரப் பகுதியில் பலத்த பாதுகாப்பு
தமிழகத்துக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.
Advertisement
முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரிந்தது.
இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது குறித்த எச்சரிக்கை மத்திய உளவுத்துறையினர் தமிழக காவல்துறைக்கு அளித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையின் விளைவாக தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர எல்லையான சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் விளைவாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அளவில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.