முகப்பு
தமிழ்நாடு

மழைச் சேதம்: மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்

சென்னையில் மழையால் ஏற்படும் சேதங்கள் மற்றும் குறைகளை அந்தந்த மண்டல அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 2:57 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

சென்னையில் மழையால் ஏற்படும் சேதங்கள் மற்றும் குறைகளை அந்தந்த மண்டல அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளம் ஏற்படும் சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் மழை பாதிப்பு குறித்து 1913 என்ற புகார் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

மழைக்காலத்தில் ஏற்படும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்களின் எண்கள்:

திருவொற்றியூர் - 9445190001

மணலி - 9445190002

மாதவரம் - 9445190003

தண்டையார்பேட்டை - 9445190004

ராயபுரம் - 9445190005

திரு.வி.க. நகர் - 9445190006

அம்பத்தூர் - 9445190007

அண்ணா நகர் - 9445190008

தேனாம்பேட்டை - 9445190009

கோடம்பாக்கம் - 9445190010

வளசரவாக்கம் - 9445190011

ஆலந்தூர் - 9445190012

அடையாறு - 944519001

பெருங்குடி - 9445190014

சோழிங்கநல்லூர் - 9445190015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.