ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தீபாவுக்கு படகு சின்னம்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்கு இன்றைய தினம் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியது. முன்னதாக தனக்கு பேனா, திராட்சை கொத்து, படகு ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கும்படி தீபா கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற 50 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை தீபா நியமித்துள்ளார். சின்னம் கிடைத்தவுடன் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை தொடங்க தீபா திட்டமிட்டிருந்தார் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தற்போது படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் தீபா தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.