சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களை அரசு கையகப்படுத்தி சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சி.என்.பட்டடை பகுதியில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய தொழில்களைப் பிரதானமாகக் கொண்ட விண்ணம்பள்ளி, மகிமண்டலம், பெரிய போடி நத்தம், வள்ளிமலை, முத்தரசி குப்பம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமார் 3,200 ஏக்கரில் சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் வேளாண் விலை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், கால்நடை பாதிப்பு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆகவே இந்த சிப்காட் திட்டத்தைக் கைவிடக் கோரியும் பல்வேறு கட்டமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நேற்று மீண்டும் சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய வந்ததாகவும் அதற்காக இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை. ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தை அறிந்த கோட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இதனால் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.