முகப்பு
தமிழ்நாடு

அகில இந்திய முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் 585 புதிய இடங்கள்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் 595 புதிய இடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:35 am IST
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் 595 புதிய இடங்கள் சேர்க்கப்பட உள்ளன.
அகில இந்திய இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மார்ச் 27 -ஆம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு 10,450 இடங்களும், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் 972 இடங்கள் என மொத்தம் 11,422 இடங்கள் நிரம்பின.
இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்கான நடைமுறைகள் ஏப்ரல் 9 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 585 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 56 இடங்கள்: மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில், அகில இந்திய தொகுப்புக்கான 50 சதவீத இடங்கள் 2 -ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 585 இடங்கள் அந்த வகையில் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழகத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 56 இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments