போராட்டம் வன்முறையாகக் கூடாது: கமல்ஹாசன் வேண்டுகோள்
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது என்பது என் வேண்டுகோள். ஆனால், போராட்டத்தை அடக்க முற்படும்போது, அது வன்முறையாக மாறிவிடும். அதனால், இரு தரப்பிலும் வன்முறை ஏற்படாத அளவு தடுக்க வேண்டிய கடமை உள்ளது. எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது அடக்குமுறையாகும். தமிழக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் அளவுக்கு மத்திய அரசு கொண்டு சென்றுவிடக் கூடாது என்றார் கமல்ஹாசன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.