வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தன.
மேலும், மாவட்டங்களின் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை வங்கிகள் வழக்கம் போல இயங்கியதால், மதிய உணவு இடைவேளை மற்றும் பணி முடிந்தபிறகு மாலை நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இதர வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பங்கேற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.