ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு
சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு, இன்று காலை சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரீனா நோக்கி ஊர்வலமாகச் சென்ற திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
அங்கிருந்து வாகனத்தில் அழைத்து வரப்பட்ட தலைவர்கள், பெரம்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.