காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளுக்கு திமுக, காங்கிரஸே காரணம்: பொன். ராதாகிருஷ்ணன்
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவப்படத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில் அவர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் இப்போது உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு கழக ஆட்சியே காரணம். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னைகளில் கடந்த 50 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் செய்த துரோகத்தை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
வருகிற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் 30 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் அந்த அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்பது அப்போது தெரியவரும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.