முகப்பு
தமிழ்நாடு

போக்கிரிப் பட பாணியில் எதிரிகளுக்குப் பொறி வைத்து வசமாக சிக்கிய தலைமைக் காவலர்

முன்விரோதம் காரணமாக எதிரிகளைப் பழிவாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் வைக்க தூண்டியதாக சங்கர்நகர் காவல்நிலைய தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 1:06 pm IST
பகிர்:

முன்விரோதம் காரணமாக எதிரிகளைப் பழிவாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் வைக்க தூண்டியதாக சங்கர்நகர் காவல்நிலைய தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், பூமிநாதன் ஆகிய இருவருடனும் முன்விரோதம் இருந்துள்ளது. சதீஷ்,பூமிநாதன் ஆகிய இருவரும் அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், தன்னிடம் அடிக்கடி தகராறு செய்து வரும் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆறுமுகம் தனக்கு நன்கு அறிமுகமான சங்கர்நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமதுரையிடம் புகார் செய்தார். ஆறுமுகம் அளித்த புகாரைத் தொடர்ந்து சதீஷ்,பூமிநாதன் ஆகிய இருவரையும் சங்கர்நகர் காவல்நிலையத்திற்கு தலைமைக்காவலர் ராமதுரை விசாரணைக்கு வரச் சொன்னதாகக் கூறப்படுகிறது. 

இருவரும் சனிக்கிழமை மோட்டார்சைக்கிளில் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல்நிலையத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். அவர்களிடம் சிறிது நேரம் விசாரணை மேற்கொண்ட ராமதுரை, உங்கள் மீது சந்தேகம் இருப்பதால் மோட்டார் சைக்கிளை நான் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, காவல்நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.

Advertisement

Advertisement

அங்கு ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்த காவலர் ராமதுரை, சதீஷ், பூமிநாதனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இருவரும், தங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுத்தனர். இது குறித்து ஆய்வாளர் ஜான்வின்சென்ட் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தபோது சதீஷ், பூமிநாதன் மீது புகார் அளித்த ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. ஆறுமுகத்திடம் மேற்கொண்ட விசாரணையில் தலைமைக் காவலர் ராமதுரை கூறிய திட்டப்படி கஞ்சா வைத்து எதிரிகளை பழிவாங்க திட்டமிட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான தலைமைக் காவலர் ராமதுரை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments