முகப்பு
தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வங்கி ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 26 டிசம்பர் 2018, 1:20 am IST
பகிர்:


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வங்கி ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வங்கிகளை இணைக்கக் கூடாது, ஊதிய உயர்வு வேண்டும், பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய 
அளவில் புதன்கிழமை (டிச.26) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால், வங்கிச் சேவையை பெரிதும் நம்பியுள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.
எனவே, வங்கி ஊழியர் சங்கத்துடன் மத்திய பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments