தஞ்சையில் விமானப் படைக்கான ஆட்கள் தேர்வில் 1,700 பேர் பங்கேற்பு
இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான ஆட்கள் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான ஆட்கள் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், முதல் கட்டமாக தஞ்சாவூர், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக திங்கள்கிழமை நடத்தப்பட்ட இம்முகாமில் 1,712 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உடற்தகுதி தேர்வில் 941 இளைஞர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் 541 பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் நாள் முடிவில் தேர்ச்சி பெற்ற 14 பேர் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உளவியல் மற்றும் குழுக் கலந்தாய்வு தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இப்பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது, கோட்டாட்சியர் சி. சுரேஷ், தில்லி குழுக் கட்டளை அலுவலர் ஸ்ரீவர்ஸன், கட்டளை அலுவலர் சைலேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அடுத்து இரண்டாம் கட்டமாக ஜூலை 26-ஆம் தேதி கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.