முகப்பு
தமிழ்நாடு

இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனப் பொருள்களுக்கு கூடுதல் வரி இல்லை: அமெரிக்க வரி ஆணையம் அறிவிப்பு

இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிந்தட்டிக் ஃபுளோரோபாலிமர் உள்ளிட்ட ரசாயனப்பூச்சு பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்போவதில்லை

Updated On : 6 நவம்பர் 2018, 5:20 am IST
பகிர்:


இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிந்தட்டிக் ஃபுளோரோபாலிமர் உள்ளிட்ட ரசாயனப்பூச்சு பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வகை ரசாயனங்கள் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் உள்பூச்சாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை மைனஸ் 40 முதல் 260 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கும் என்பதால், பல்வேறு பொருள்களில் குளிர் மற்றும் வெப்பத்தை தாங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரசாயனப் பொருள்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்க சந்தையில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இந்த ரசாயனங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அப்பொருள்களின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் இது தொடர்பாக ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனப்பூச்சு பொருள்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதிக்க வேண்டியது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில், மிகை இறக்குமதி தடுப்பு வரியின் கீழ் 22.78 சதவீதம் வரி விதிக்க முடியும். அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு ரசாயனப்பூச்சு பொருள்களை ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக தடைபட்டு விடும் அபாயம் இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments