கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி!
கோவையில் டெங்கு காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
கோவை: கோவையில் டெங்கு காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் டெங்குவும், பன்றிக் காய்ச்சலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு பன்றி, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா(24). இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.