முகப்பு
தமிழ்நாடு

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: சூடான் நாட்டைச் சேர்ந்தவர் கைது

செல்லிடப்பேசியில் மறைத்து வைத்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய சூடான் நாட்டைச் சேர்ந்தவரை, கோவையில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 6 நவம்பர் 2018, 1:16 am IST
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.
பகிர்:


செல்லிடப்பேசியில் மறைத்து வைத்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய சூடான் நாட்டைச் சேர்ந்தவரை, கோவையில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை தனியார் விமானம் வந்தது. அதில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளின் உடைமைகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டனர்.
அப்போது, சூடான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் அகமது இஸ்காக் மூசா (38) என்பவர் செல்லிடப்பேசியில் பேட்டரி இருக்கும் பகுதியிலும், இடுப்புப் பட்டையின் இரும்புப் பகுதியிலும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 761 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments