பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைத்த சிபிசிஐடி
தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அமைப்பிடம் சிபிசிஐடி ஒப்படைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அமைப்பிடம் சிபிசிஐடி ஒப்படைத்துள்ளது.
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
Advertisement
Advertisement
அதேசமயம் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இதற்கு சம்மதித்த தமிழக அரசு அதுதொடர்பான அரசாணையை வெளியிட்டது.இதையடுத்து சிபிஐ கடந்த 27-ம் தேதி விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அமைப்பிடம் சிபிசிஐடி ஒப்படைத்துள்ளது.இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.