தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.25,496-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.25,496-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.3,187-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.43.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,700 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை
விலை ரூபாயில்
(ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 3,187
1 பவுன் தங்கம் 25,496
1 கிராம் வெள்ளி 43.70
1 கிலோ வெள்ளி 43,700