வ.கெளதமன் புதிய கட்சி தொடக்கம்
தமிழ்ப் பேரரசு கட்சி என்ற பெயரில் இயக்குநர் வ.கெளதமன் புதிய கட்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். விருகம்பாக்கத்தில் புதிய அலுவலகம் செயல்படுகிறது.
தமிழ்ப் பேரரசு கட்சி என்ற பெயரில் இயக்குநர் வ.கெளதமன் புதிய கட்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். விருகம்பாக்கத்தில் புதிய அலுவலகம் செயல்படுகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்த நாங்கள் அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவு செய்திருக்கிறோம். தூய்மையான எங்கள் செயல்பாட்டால் தமிழக மக்களின் பேராதரவைப் பெறுவோம். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் குறித்த எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.