முகப்பு
தமிழ்நாடு

அரிச்சல்முனை கடற்கரையில் 105 சித்தாமை முட்டைகள் கண்டெடுப்பு

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 105 சித்தாமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர். 

Updated On : 15 ஜனவரி 2019, 12:54 am IST
தனுஷ்கோடி கடற்கரையில் திங்கள்கிழமை கண்டெடுத்த 105 சித்தாமை முட்டைகளுடன் வனத்துறையினர். 
பகிர்:


தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 105 சித்தாமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் சித்தாமைகள் டிசம்பர் முதல் மார்ச் வரையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். கடந்த ஆண்டு 25 ஆயிரம் ஆமைகள் முட்டைகளை விட்டு சென்றன. அவை மீட்கப்பட்டு ஆமை குஞ்சு பொறிப்பக காப்பத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன. இதில் பொறிக்கப்பட்ட 95 சதவீதம் குஞ்சுகள் கடலில் விட்டப்பட்டன. 
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக ஆமைகள் டிசம்பர் மாதம் வரவில்லை. ஒரு மாதம் கடந்த நிலையில் முதல் முறையாக திங்கள்கிழமை அதிகாலையில் 105 முட்டைகளை ஆமைகள் இட்டுச் சென்றுள்ளன.
இதனையடுத்து வனச்சரக அலுவலர் சு. சதீஷ் தலைமையில் மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆமை முட்டை பாதுகாப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் 105 முட்டைகளையும் மீட்டு குஞ்சு பொறிப்பக காப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர். 
இந்த ஆண்டு 20 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். கரையோரம் ஆமைகள் முட்டையிட வரும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரையில் கரை வலை மீனவர்கள் வலைகளை கரையோரம் போட வேண்டாம். இந்த முட்டைகள் 50 நாள் முதல் 70 நாள்களுக்குள் குஞ்சு பொறித்தவுடன் கடலில் விடப்படும் என வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments