முகப்பு
தமிழ்நாடு

2019 நாடாளுமன்ற தேர்தல்: 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்தது அதிமுக

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அதிமுக அமைத்துள்ளது. 

Updated On : 23 ஜனவரி 2019, 10:49 am IST
பகிர்:

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அதிமுக அமைத்துள்ளது. 

இக்குழு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, பிரபாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.