ராசிமணலில் அணைக்கட்ட வேண்டும்: பி.ஆர். பாண்டியன்
கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்
கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோதாவரியை இணைப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தீர்வு காணவும் முடியாது, சம்பந்தப்படுத்தவும் முடியாது. ஆகவே, ராசிமணலில் அணைக்கட்டுவது ஒன்று தான் தமிழகத்தையும் காவிரி டெல்டாவையும் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் ராசிமணலில் அணைக் கட்டுவதை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.