திற்பரப்பு அருவியில் மக்கள் வெள்ளம்
கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், விடுமுறையைக் கொண்டாட மக்கள் அலை அலையாக சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இப்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருணம் வந்துவிட்டது.
இதற்கிடையில், குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இங்கு இதுவரை இல்லாத வகையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது.
காலை 5 மணி முதல் இரவு வரை மக்கள் வந்து குளித்துச் சென்றனர்.
அதிக சுற்றுலாப் பயணிகள் வரத்து காரணமாக அருவிப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவற்கு இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், திற்பரப்பு பிரதான சாலைப் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கும் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.