திமுக மாநாடு: ஒவைசிக்கு அழைப்பு
திமுக சாா்பில் நடத்தப்படும் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டிற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக சாா்பில் நடத்தப்படும் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டிற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக சாா்பில் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாடு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அசாதுதீன் ஒவைசியை திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாநிலச் செயலாளா் மஸ்தான் ஹைதராபாதில் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளாா். அந்த அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்க ஒவைசி ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக ஒவைசி கூறியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.