கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி: கமல் உருக்கம்
கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி என்று எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி என்று எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்.மறைந்த மாதவனுக்கு வயது 86. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததால் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார்.
எழுத்தாளர் ஆ. மாதவனின் முதல் நாவலான புனலும் மணலும், 1970-களில் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. கிருஷ்ணப் பருந்து இவருடைய புகழ்பெற்ற நாவல். தூவானம் என்றொரு குறுநாவலும் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
எண்ணற்ற சிறுகதைகளும் எழுதியுள்ளார். திருவனந்தபுரத்தில் சாலைத் தெருவில் கடை வைத்திருந்த இவர், கடை வீதிப் பின்னணியில் நிறைய கதைகளை எழுதியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் மாதவன்.
மலையாளத்திலிருந்து இரு நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்நிலையில் கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி என்று எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.’ என்று பதிவிட்டுள்ளார்.