திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.
மீண்டும் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள ரோசனை ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்ததால் கரையில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, ரோசனை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
இதில், சாலைகளில் மழை வெள்ள நீர் வழிந்தோடியதோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்றதால் தண்ணீர் வடிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் சென்று பார்வையிட்டு, ஏரி உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.