திருவத்திபுரம்: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி அறவழிப் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மனு வழங்கும் போராட்டம் வியாழக்கிழமை திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்றது.
செய்யாறு: வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மனு வழங்கும் போராட்டம் வியாழக்கிழமை திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்றது.
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு தனியாக 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி மூன்றாம் கட்டமாக அந்தந்தப் பகுதிகளில் நகராட்சிப் பகுதிகளில் மனு வழங்கும் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு பாமக செய்யாறு நகர செயலாளர் விநாயகம் தலைமைத் தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்னை.சீனுவாசன், மாநில துணை தலைவர் மு.துரை. முக்கூர் ராமஜெயம், தி.க.காத்தவராயன், மண்ணப்பன், மாநில தொண்டர் அணி தலைவர் ஜெயசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வ. ஏழுமலை, கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார், துணைத் தலைவர் நாகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Advertisement
Advertisement
இந்த அறப் போராட்டத்தின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகித இட பங்கீடு கேட்டு கோஷங்களை எழுப்பி கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நகராட்சி ஆணையாளர் பீரித்தியிடம் பாமக நிர்வாகிகள் வழங்கினர்.
முன்னதாக செய்யாறு பெரியார் சிலையில் இருந்து காந்திசாலை வழியாக கட்டைக்கூத்து கலைஞர்கள் பங்கேற்ற நடனத்துடன் ஆடி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் முழுக்கமிட்டவாறு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.