ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர்
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும். அலங்காநல்லூரில் 655, பாலமேட்டில் 651, அவனியாபுரத்தில் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்.
தை மாதம் மட்டுமல்ல எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது. தற்போதைய தமிழக அரசே தொடரும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.