முகப்பு
தமிழ்நாடு

திண்டிவனத்தில் ராமதாசை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு, அதிமுகவைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ராமதாசை சந்தித்துப் பேசினர்.

Updated On : 11 ஜனவரி 2021, 3:39 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு, திங்கள்கிழமை பிற்பகல் 12.25 மணிக்கு காரில் வந்த அதிமுகவைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் ராமதாசை சந்தித்துப் பேசினர்.

பிற்பகல் 12.25 மணிக்கு வருகைதந்த அமைச்சர்கள் இருவரும், ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, அமைச்சர்கள் இருவரும் பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்து காரில் புறப்பட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பினர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்க முயன்றபோது, அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக பாமக மற்றும் அதிமுக தரப்பில் கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பானது என்றும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

கரோனா வைரஸ் பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், வெளி நபர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து தனிமையிலிருந்து வந்தார். அவரது உதவியாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் இரண்டாவது முறையாக சந்தித்துச் சென்றுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், பாமகா புதுவை மாநில அமைப்பாளர் முன்னாள் எம்பி தன்ராஜ் மட்டும் உடன் இருந்தார்.

அதிமுக கூட்டணியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தொடர்வது தொடர்பாகவும், மேலும் வன்னியர்களுக்கான 20 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், தேர்தலுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக, அதிமுக அமைச்சர்கள் பேசி சென்றுள்ளதாக பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments