முகப்பு
தமிழ்நாடு

ரஜினி ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்: எல்.முருகன்

குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 11 ஜனவரி 2021, 3:14 pm IST
நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் மாநில தலைவர் முருகன் உடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பகிர்:

குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் எல்.முருகன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மகளிர் அணியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் மாவட்ட பாஜக அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று குமரி மாவட்ட ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் , சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. குமரி தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தமிழகம் முழுவதும் தொடரும் வெற்றியாக அமையும். 

Advertisement

Advertisement

வேளாண் சட்டங்களை பெரும்பாலான விவசாயிகள் ஆதரிக்கிறார்கள். விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை தமிழகம் முழுவதும் இதுவரை 41 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக நடத்திய அனைத்து போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது‌.  

இதே போல் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தோல்வியைச் சந்திக்கும். திமுகவில் அவர்களது கட்சியின் பெண் எம்எல்ஏ..வுக்கே பாதுகாப்பு இல்லை. அவர்கள் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்கள்? பாஜகவின் அரசியல் எப்போதுமே தேசியம், தெய்வீகம் கலந்த அரசியல் எனவே ரஜினி ரசிகர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments