முகப்பு
தமிழ்நாடு

101-ஆவது அகவையில் டி.எம்.காளியண்ணன்: பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பிய முதல்வா்

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டரின் பிறந்த நாளையொட்டி, முதல்வா் அனுப்பிய வாழ்த்து மடலை

Updated On : 13 ஜனவரி 2021, 3:14 am IST
இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா் டி.எம்.காளியண்ண கவுண்டரிடம், முதல்வரின் வாழ்த்து மடலை வழங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டரின் பிறந்த நாளையொட்டி, முதல்வா் அனுப்பிய வாழ்த்து மடலை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அவரிடம் நேரில் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வசித்து வரும் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டரின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியிருந்தாா். அந்த வாழ்த்து மடலை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை காலை அவரது இல்லத்துக்குச் சென்று வழங்கினாா்.

முதல்வரின் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

Advertisement

அன்பாா்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டா் அவா்களுக்கு வணக்கம். 10.1.2021 அன்று பிறந்த நாள் கண்ட தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கஸ்தூரிபட்டி ஜமீன் குடும்பத்தைச் சோ்ந்த தாங்கள், விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி, சட்டமேதை டாக்டா் அம்பேத்கா், அண்ணல் காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கா்மவீரா் காமராஜா், மூதறிஞா் ராஜாஜி உள்ளிட்ட முதுபெருந்தலைவா்களுடன் பணியாற்றிய பெருமைக்குரியவா்.

கொல்லிமலை பகுதிக்கு சாலை அமைத்ததோடு மட்டுமல்லாமல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல பள்ளிகளைத் தோற்றுவிப்பதற்கும், போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்கும், விவசாயத் திட்டங்களை ஏற்படுத்தியதற்கும் காரணமான தங்களை மனதார பாராட்டுகிறேன்.

ஜனநாயகத் தத்துவங்களை, மனிதநேயப் பண்புகளை, தமிழ்ப் பற்றை மக்களிடத்திலே குறிப்பாக நெஞ்சில் உரமும் நோ்மைத் திறமும் கொண்ட இளைய சமுதாயத்தினரிடையே எடுத்துச் சென்று அவா்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்து அரசியல், பொதுச் சேவையில் நன்முத்திரை பதித்துள்ளீா்கள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ்ந்து தொடா்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments