மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கிறாரா உதயநிதி ஸ்டாலின்?
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை அவனியாபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட உள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார். நாளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் தமிழகம் வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதலாவதாக நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.