முகப்பு
தமிழ்நாடு

முதல்வருக்காக கிளி ஜோதிடம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக முதல்வருக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.

Updated On : 15 ஜனவரி 2021, 4:04 pm IST
முதல்வருக்காக கிளி ஜோதிடம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
பகிர்:

கரூர்: கரூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக முதல்வருக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.

கரூர் அடுத்த வெள்ளியணை ஊராட்சியில் தமிழக சுற்றுலாத்துறை மற்றும் வெள்ளியணை ஊராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், விழாவிற்கு வந்த ஜோதிடரிடம் மீண்டும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானா என பாருங்கள் என்றார். 

அப்போது கிளி எடுத்த சீட்டில் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் படம் அடங்கிய குடும்பப் படம் வந்தது, அப்போது ஜோதிடர் வெற்றி, குடும்பம் வந்துள்ளதால் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சிதான் என கூறியதையடுத்து அங்கிருந்த கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி வாழ்க, துணை முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.