முகப்பு
தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம்: விரைவில் தேதி அறிவிக்கப்படும்

கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறுவதாக இருந்த

Updated On : 16 ஜனவரி 2021, 6:30 am IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

தொடா் முயற்சிகள் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததைத் தொடா்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடுமுழுவதும் வரும் சனிக்கிழமை தொடங்குவதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.