அவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்
அவிநாசி மங்கலம் சாலையில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
அவிநாசி: அவிநாசி மங்கலம் சாலையில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
அவிநாசி மங்கலம் சாலையில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது மனைவி வசந்தி(60). உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த வசந்தி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்தார்.
இதையடுத்து அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் முயற்சியினால், குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உயிரிழந்த வசந்தியின் கண்கள் தானமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து 6 மணி நேரத்திற்குள் வசந்தியின் வீட்டிற்கு வந்த கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், பாதுகாப்பான முறையில் வசந்தியின் இரு கண்களையும் தானமாக பெற்றுச் சென்றனர்.
கண்களை தானம் செய்த வசந்தி தேவராஜ் குடும்பத்தினருக்கும், அவிநாசி பகுதியில் தொடர்ந்து கண்தான முயற்சியில் ஈடுபட்டு வரும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர்க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.