காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார்: கமல் நெகிழ்ச்சி
’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார் என்று மநீம தலைவர் கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார் என்று மநீம தலைவர் கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மநீம தலைவர் கமல் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் உடல்நலம் குன்றி அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர், பூரண நலம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தான் பேசிய பகுதி குறித்த விடியோவைத்தான் கமல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தனது பதிவில், ‘’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’. அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள். #நாளை_நமதே’ என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement