ஊத்துக்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து கரோனா விழிப்புணர்வு பேரணியை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தினர்.
பேரணிக்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருவள்ளூர் நாகலாபுரம் சாலை வழியாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தை அடைந்தனர்.
இதில் கரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வர்த்தக சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
Advertisement
Advertisement
மேலும் சாலையில் முகக்கவசம் இன்றி வந்த பொதுமக்களையும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் டிஎஸ்பி சாரதி எச்சரித்து முகக்கவசங்களை வழங்கி அனுப்பினார்.
இந்தப் பேரணியில் சுகாதாரத் துறை சார்பாக மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.