ஆம்பூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் : உறவினர்கள் சாலை மறியல்
மாதனூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதில் உரிய விசாரணை கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்: மாதனூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதில் உரிய விசாரணை கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜெய்சங்கர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மாதனூர்-ஒடுகத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.