முகப்பு
வணிகம்

ஜியோ விண்ணப்பத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Updated On : 22 ஜூன் 2026, 11:05 pm IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் சேவைப் பிரிவான 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49 வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் பிராட்பேண்ட், தூய ஆற்றல் மற்றும் நுகர்வோர் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை வெளியிட்டதும், பங்குகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1.31 சதவீதம் உயர்ந்து ரூ. 1,326.55 ஆகவும் வர்த்தகத்தின் போது, ​​இது 2.75 சதவீதம் உயர்ந்து ரூ. 1,345.45 ஐ எட்டியது.

Advertisement

Advertisement

நிஃப்டி-யில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 1,309.50 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது நிறுவனத்தின் பங்குகள் 2.70 சதவீதம் உயர்ந்து ரூ. 1,344.90 ஐ எட்டியது.

இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,275.96 கோடி அதிகரித்து ரூ. 17,95,158.92 கோடியாக உயர்ந்தது.

ஐபிஓ மூலம் சுமார் ரூ. 37,700 கோடி திரட்டப்படலாம் என்றும், இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

summary

Shares of Reliance Industries ended over one per cent higher on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments