ஹெச்.சி.எல். பங்குகள் 4 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு!
ஜூன் காலாண்டு வருவாய் முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இல்லாததால் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
புதுதில்லி: ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஜூன் காலாண்டு வருவாய் முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இல்லாததால் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, அதன் சந்தை மதிப்பு ரூ. 14,653.78 கோடி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு 4.42 சதவீதம் சரிந்து ரூ. 1,167ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, இந்த பங்கு 4.66 சதவீதம் சரிந்து ரூ. 1,164 வரை சென்ற நிலையில், நிஃப்டி-யில் இந்த பங்கு 4.46 சதவீதம் சரிந்து ரூ. 1,166.70 ஆக நிறைவடைந்தது.
இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 14,653.78 கோடி குறைந்து ரூ. 3,16,684.72 கோடியாக சரிந்தது.
Advertisement
Advertisement
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. சிறப்பான செயல்பாட்டின் காரணமாக நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ரூ. 4,624 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் சாதனை அளவாக 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையில், இந்தியாவில் தரவு மையங்களை அமைப்பதற்காக ரூ. 3,500 கோடி வரையிலான முதலீட்டிற்கும் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலம் வந்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ. 34,579 கோடியாக இருந்தது.
Shares of HCL Technologies dropped over 4 per cent on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.