FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயில் நில அபகரிப்பு மீதான தடை நீக்க உத்தரவு! சிபிஐ(எம்) வரவேற்பு!

கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் மீதான தடை நீக்க உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 9:03 pm IST
பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் மீதான தடை நீக்க உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை கடந்த ஜூலை 9 அன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3,084 ஏக்கருக்கு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த தடை நீக்க ஆணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. மக்களின் நில உரிமை, குடியிருப்பு உரிமை இந்த உத்தரவு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்துகிறோம்.

தற்போது, அயோத்தியில் ராமர் கோயிலிலேயே உண்டியலை திருடிய கூட்டம் அதைப்பற்றி பேச மறுக்கிற கூட்டம் இப்போது இந்து பக்தர்களுக்கு அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த சக்திகள் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் மக்களின் உரிமைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் இனாம் நில விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை முன்மாதிரியாகக் கொண்டு இனாம் நில பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

summary

The Communist Party of India (Marxist) has welcomed the order lifting the ban on lands that had been erroneously reclassified in the names of temples.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments