FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறையில் விசாரணைக் கைதி மரணம்: 3 பேர் கைது

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 14 ஜூலை 2026, 9:22 pm IST
சிறையில் உயிரிழந்த சபரிவர்மன் / கைது செய்யப்பட்டவர்கள் - எக்ஸ்
பகிர்:

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் இன்று (ஜூலை 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வில் சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

கைது செய்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிறையில் அடைத்தபோது உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட நீதிபதி முனிடையில் இன்று உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில், சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.

summary

Death of undertrial prisoner: 3 arrested, including prison warden

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments