FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. மத்திய சிறையில் கைதி சாவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

3 ஜூலை 2026, 4:57 am IST
கோப்புப்படம்
பகிர்:

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, முகமது சாலிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பொன்ராஜ் (43). இவா், தனது பெரியம்மாவை கொலை செய்ததாக வடபாகம் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

பொன்ராஜூக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவா் சிறையில் சிகிச்சை எடுத்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு திடீரென வலிப்பு அதிகமானதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments