FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக, இன்றைய வர்த்தகத்தில், அதன் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்தன.

Updated On : 17 ஜூலை 2026, 9:54 pm IST
Reliance Industries
பகிர்:

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக, இன்றைய வர்த்தகத்தில், அதன் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 45,334 கோடி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கின் விலை 2.59 சதவீதம் உயர்ந்து ரூ. 1,326.50 ஆகவும், வர்த்தகத்தின் போது ​​இந்த பங்கு 2.85% உயர்ந்து ரூ. 1,329.95 ஆக வர்த்தகமானது.

நிஃப்டி-யில் இந்த பங்கு 2.36 சதவீதம் உயர்ந்து ரூ. 1,327.20 ஆக நிறைவடைந்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 45,334.01 கோடி அதிகரித்து ரூ. 17,95,091.26 கோடியாக உயர்ந்தது.

Advertisement

Advertisement

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் 8.49 லட்சம் பங்குகளும், நிஃப்டி-யில் 183.02 லட்சம் பங்குகளும் வர்த்தகமானது.

summary

Shares of Reliance Industries Ltd climbed nearly 3 per cent on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments